ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க (வயது 61) இன்று காலனாமார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இன்று மாலை காலமானார் என அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 54 ஆயிரத்து 318 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்தார்.
மஹிந்த ஆட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க