உள்நாட்டு செய்திகள்புதியவை

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு!

அரச வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் அவசரமாக தேவைப்படும் அதேவேளை அவை தாமதமாகும் நோயாளிகளுக்கு அடுத்த மாதம் முதல் தனியார் மருத்துவமனைகளில் 52 முறைமைகளின் கீழ் மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

அரச வைத்தியசாலை வைத்தியர்கள் தனியார் மருத்துவமனைகளை முன்னெடுத்து செல்வதால் அரச வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் தாமதமாவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வைத்தியர்கள் நோயாளியின் உடல்நிலை அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் செய்யவுள்ளார்கள்.

இது போன்ற நோயாளிகளுக்காக பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதயம், சிறுநீரகம் மற்றும் குடல் தொடர்பான அறுவை சிகிச்சைகள் இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு பகுதியளவு தனியார் மருத்துவமனைகளிலும், மேலும் ஐந்து தனியார் மருத்துவமனைகளிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க