வணிக வங்கிகளில் சிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கான 15 சதவீத சிறப்பு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்று நிதியமைச்சு இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளது.
மற்ற வட்டி விகிதங்களில் மாற்றங்கள் இருந்தபோதிலும் இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
சிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட விடயத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட்ட பிரஜைகளின் அதிகரித்த 15 சதவிகித வட்டியை வழங்குவதற்காக திறைசேரி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 16 பில்லியன் ரூபாவை வணிக வங்கிகளுக்கு செலுத்தி வருகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான 15 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2015 முதல் எந்த மாற்றமும் இன்றி செலுத்தபடுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க