உள்நாட்டு செய்திகள்புதியவை

‘எதிரணியினர் கோட்டாவை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர்’

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக பேசுகிறார்கள் என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

தனிப்பட்ட தேவைகளை இலகுபடுத்தும் நோக்கிலேயே “கோட்டபய ராஜபக்ஷ அமெரிக்கப் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் நாட்டிக்கரு எந்த பங்கமும் வரப்போவதில்லை.

எவ்வாறாயினும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார், இருந்தபோதும் எதிரணியினர் அவரது பிரஜாவுரிமை தொடர்பாகவே பேசுகின்றார்கள்.

இதன்மூலம் அவரை தேர்தலில்  எதிர்கொள்வதில்  அச்சம் ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது” என அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க