உள்நாட்டு செய்திகள்புதியவை

‘முகத்தை மூடும் ஆடைக்கு நிரந்தர தடை விதிக்கக் கூடாது;

முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைகளுக்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிப்பதை ஏற்கும் நிலையில் நாம் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசியமில்லை.

நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஒருவாரம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதற்குள் இதற்கான நிரந்தர தீர்வு தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது வெளிநாட்டு சாதி இதற்கு கூலிப்படையினர் சிலர் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இது தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு முயற்சி ப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்த மறுநாள் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்தரமாக தடைசெய்வதற்கான உத்தரவை அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் அவை அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த தடை இல்லாமல் ஆக்கப்பட்டும்.

இந்த நிலையில் நாட்டிலுள்ள பேரினவாத அமைப்புகள் என்ற அச்சத்தில் அதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க