உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சம்பந்தனை அவசரமாக சந்திக்கிறார் சஜித்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது என அரசியல் தரப்புகளிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிவரும் சஜித் பிரேமதாச, அதற்காக பல தரப்புகளையும் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்.

அதன்ஓர் அங்கமாகவே சம்பந்தனை சஜித் சந்திக்கவுள்ளார் என்றும்,  இதற்கு நேரம் ஒதுக்குமாறுகோரி சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார் என்றும் .தே.க. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் சார்பில் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்தாலும் இதற்கு ரணிலும், அவரின் சகாக்களும் பச்சைக்கொடி காட்ட மறுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தனக்கான ஆதரவை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கையில் சஜித் தீவிரமாக இறங்கியுள்ளார்.

 

 

கருத்து தெரிவிக்க