ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.
குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மத்திய அரசு அதற்கான வர்த்தமானியை தற்போது வெளிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6- 5 ஆண்டுகளாக மாறுகிறது என மத்திய அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி வரும் காலங்களில் அப்பகுதிக்கு அமுலாகவுள்ளது.
அதேவேளை பிற மாநில மக்களும் ஜம்மு- காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு- காஷ்மீரில் அம்மாநில பெண்கள் சொத்து வாங்க முடியும்.
370வது பிரிவு இரத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைக்கவும் கூட்டவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க