கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்ந்து ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கணித ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உட்பட 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று அத்தனகல்ல நீதிவான் தரங்க ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் மிரட்டல் விடுக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கண்டி பிரதான வீதியில் கண்டி நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று மீது பிரபுக்கள் வாகனம் சென்ற சிலர் கலஹெட்டியேன பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர்கள் கடந்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் இன்றைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கருத்து தெரிவிக்க