உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலையில்’

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைகளுக்கு உரிய முறையில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலையில் கானப்படுகின்றன.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போக நெற்செய்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு கூட்டத்தீர்மானத்திற்கு அமைவாக நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் விவசாய்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஊரியான் முரசுமோட்டை பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் விநியோகிக்கப்படாத நிலையில் நுற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலையில் கானப்படுகின்றன.

குறிப்பாக நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் விடுமுறை நாட்களில் கடமையில் இல்லாத நாட்களில் நீரின் விநியோக அளவை குறைப்பதனால் இரணைமடுக்குளத்தின் சிறுபோக செய்கையின் எல்லை பிரதேசங்களாக காணப்படுகின்ற மேற்படி பகுதிகளுக்கு உரிய முறையில் நீர் கிடைப்பதில்லை.

இதனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெரும் அளவில் நிதியை செலவிட்டு நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தமது விவசாய செய்கைகளை கைவிடுகின்ற நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் இவ்வாறு நீரின்றி கருகிய நிலையில் காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமது பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க