கிராமிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் மூன்றாம் கட்ட ஒதுக்கீடுகளுக்கான கடிதங்கள் வழங்கும் நிகழ்வு [04.08] நேற்று புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் றூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 87 வேலைத்திட்டங்களுக்கு 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
வீதிகள்,பாடசாலை அபிவித்தி,குடிநீர்,விளையாட்டு மைதானபுனரமைப்பு,சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதிகளுக்கான அனுமதி கடிதங்கள் கிராம அமைப்புக்களை சார்ந்தவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கடிதங்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி சிவமோகன் அவர்களின் வன்னிமாவட்ட இணைப்பாளர் ச ரூபன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான இ.சத்தியசீலன் இ. சந்திரரூபன் அ.தவக்குமார் ச.தில்லைநடராசா கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தி.ரவீந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டு கிராம அபிவிருத்திக்கான அனுமதிக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.
கருத்து தெரிவிக்க