இலங்கையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் படைத்தரப்பினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் புலனாய்வுப்பிரிவினர் உட்பட்ட படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சமய நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தவிர உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முக்கியமான தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே பாதுகாப்பு குறித்து உள்ளுர் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் அச்சம் கொள்ளவேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க