சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.- சாக்ரடீஸ்
உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவனாக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனைத் தாழ்ந்தவனாக்கும்.- அரிஸ்டாட்டில்
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம்; ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.- அப்துல் கலாம்
மனிதன் அல்லவா பணத்தை உருவாக்குகிறான்! பணம் மனிதனை உருவாக்கியது என்று எங்கே நீ கேள்விப்பட்டாய்? உன் எண்ணத்தையும் பேச்சையும் முழுமையாக ஒன்றுபடுத்திவிட்டால், உன் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்குமானால் பணம் தண்ணீரைப் போல் தானாக உன் காலடியில் வந்து கொட்டும்.- விவேகானந்தர்.
கருத்து தெரிவிக்க