உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

பிரச்சனை: கோட்டாவின் போலியான அமரிக்க சான்றிதழும் புதிய இலங்கை கடவுச்சீட்டும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராவார் என்று எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த மே மாதம் தாம் இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக அவர் கூறியிருப்பதும் தற்போது பிரச்சினையை தூண்டிவிட்டிருக்கிறது.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது கோட்டாபயவுக்கு ஹம்பாந்தோட்டை வாக்காளர் பதிவு இருந்தது.

இது ஒரு அமரிக்க குடியுரிமை பெற்றவர் அத்துடன் இரட்டைக்குடியுரிமையை பெறாதவர் எவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயரை கொண்டிக்கமுடியும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும் கோட்டாபயவுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டது.
அத்துடன் அவர் இரட்டைக்குடியுரிமை கோரலின்போது செலுத்தியிருக்காத கட்டணம் செலுத்தப்பட்டதாக மஹி;ந்தவின் அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர் கணணியில் காட்டப்பட்டது.

இந்தநிலையில் தற்போது அவரின் அமரிக்காவின் பிரஜாவுரிமை கைவிட்டு விட்டதாக வெளியான சான்றிதழ் பொய்யானது என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.

அத்துடன் புதிய இலங்கை கடவுச்சீட்டை பெறும் போது அமரிக்க குடியுரிமையை கைவிட்டுவிட்டதாக கூறப்படும் சான்றிதழையும் அவர் சமர்பிக்கவில்லை என்று கடவுச்சீட்டு திணைக்கள தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே இந்த சந்தேகங்கள் கோட்டாவின் விடயத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய இணையம் ஒன்று கூறுகிறது.

கருத்து தெரிவிக்க