உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நீதிமன்ற உத்தரவு கிடைக்காவிடின் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது; மஹிந்த!

இன்னும் 10 நாட்களில் குறிப்பாக ஆகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு கிடைக்காமல் போனால் இந்த வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது போய்விடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

இந்த வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என கோரி ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தால் நீதிமன்ற உதவியை நாட பட்டிருக்கின்றது.

இதனையடுத்து நீதிமன்றம் இந்த 15 நாட்களுக்குள் குறிப்பாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் அவ்வாறு தீர்ப்பு அறிவிக்காத போது இந்த வருடத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது அதை அடுத்த வருடமே நடத்த முடியும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல்கள் திணைக்களம் செய்து வருகிறது.

இதனடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி, அக்டோபர் 15-ம் தேதி க்கும் இடையிலான காலப்பகுதியில் இந்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு அடிப்படையாகக்கொண்டு இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க