சர்வதேச காவல் துறை நிறுவனமான இண்டர்போல் சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கூட, கைது செய்யப்படாமல் இருக்கும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க துபாய் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது பிரசன்னமாகி இருந்தமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்குவதாக கூறப்படும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக துபாயில் கடந்த 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்று இருக்கின்றது.
இதன்போது 33 பேர் வரை அதில் பங்கு பெற்றிருந்தார்கள். குறித்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
இந்த நிகழ்விற்கு உதயங்க வீரதுங்க அங்கு சமூகமளித்திருந்தார் இவர் ஏற்கனவே மிக் ரக விமான கொள்வனவு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
அத்தோடு பல்வேறு ஊழல்கள் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே அவரை கைது செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சர்வதேச போலீஸ் நிறுவனமான இண்டர்போல் அவருக்கு எதிரான பிடிவாரண்டு சிவப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
வீரதுங்க தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என இலங்கை செய்தி தளங்கள் தெரிவித்திருக்கின்றன.
கருத்து தெரிவிக்க