சினிமா

மீண்டும் தமிழ் பெண்ணாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே

தமிழில் இயக்குனர் சவுந்தர்யா ரஜனி காந்த் இயக்கிய ‛கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் தீபிகா. அதன் பின்னர், ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ‛சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் மீனலோச்சினி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்திருந்தார். அதனையடுத்து அவர் தற்போது மீண்டும் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ஒரு படத்திலும் தமிழ் பெண்ணாக நடிக்கப்போகிறாராம்.

இப்படம் பொலிவுட்டில் அமிதாப்பச்சன் – ஹேமமாலினி நடித்து வெளியான ‛சாத்தே பே சாத்தா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் ஹேமமாலினி நடித்திருந்தார். அதே தமிழ்ப்பெண் வேடத்தில் தற்போது தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் ஃபாரா கான் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க