பொன்மொழிகள்

ஔவையின் மொழிகள்!

  • பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும்.
  • கல் பிளவு பட்டால் மீண்டும் ஒன்று சேராது. அதுபோல, கடுமையான கோபத்தால் பிளவுபட்ட கீழ்மக்கள் மீண்டும் ஒன்று சேரமாட்டார்கள். நீரில் உண்டான பிளவு அந்த நிமிஷமே ஒன்று கூடிவிடுவதைப்போல, அறிவில் சிறந்தவர்களின் கோபமானது தோன்றிய அந்த அளவிலேயே மறைந்துவிடும்.

கருத்து தெரிவிக்க