- தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழப்பழுகுதலே சிறப்பு. ஆகவே, தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
- ‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே, கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும். ஆகவே, நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது.
கருத்து தெரிவிக்க