உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதான பாதை தொடருந்து சேவைகளில் சிக்கல்

அலவ்வ மற்றும் பொல்கஹவெல இடையே தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் காரணமாக பிரதான பாதை தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொல்கஹவெலயிலிருந்து இன்று (ஆகஸ்ட் 3) கொழும்புக்கான பயணத்தின் போது இயந்திரகோளாறு காரணமாக தொடருந்து ஒன்று செயலிழந்துள்ளது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பிரதான தொடருந்து பாதை வழியாக பயணம் செய்ய எதிர்பார்க்கப்பட்ட ஏழு தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளன.

எவ்வாறாயினும், தொடரூந்தில் உள்ள இயந்திர குறைபாட்டை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க