உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா விவசாய பண்ணையில் வருமானப்பெருக்கம்

வவுனியா அரசாங்க விதை உற்பத்தி பண்ணையில் இவ்வருடம் முதல் ஆறு மாதத்திலும் கடும் வரட்சிக்கு மத்தியிலும் இரட்டிப்பு வருமானப்பெருக்கம் காணப்படுவதாக விவசாயத்திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாணப்பணிப்பாளர் ஏ. சகிலாபானு தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.,

விவசாய பண்ணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானமானது செலவிலும் குறைவாக அல்லது செலவுக்கு சமானமாகவே காணப்பட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளது.

எனினும் இவ்விருடம் முதல் ஆறுமாதத்திலும் கடும் வரட்சியான காலநிலை காணப்பட்ட போதிலும் வருமான பெருக்கம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இவற்றில் நெல் அறுவடையின் மூலம் அதிகளவான வருமானம் பெறப்பட்டுள்ளது.

ஊடகங்களில் தற்போது இப்பண்ணையில் ஊழல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இவ் வருமானப்பெருக்கம் ஈட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் உண்மை நிலையினையும் வருமான பெருக்கத்தினையும் வெளிப்படுத்துகின்றேன் என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க