உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படாது!

இழுபறியாகியுள்ள ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பில் நாளைய தினம் கைச்சாத்திடும் எண்ணத்தை கைவிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 60 பேரில் 12 பேர் மாத்திரமே இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னர், திருத்தங்கள் அடங்கிய உத்தேச யாப்பை செயற்குழுவில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 5 இல் கைச்சாத்திடப்படும் என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க