உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பயங்கரவாதத்தை தடுக்க முயற்சிக்காது மரண தண்டனையை ஒழிக்க முயற்சி’

பயங்கரவாதத்தை முற்றாக அகற்றும் புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்காத சிலர், மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருநாகலில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்பதாலாகும்.

இதன் காரணமாகவே நான் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை நான் ஆரம்பித்துள்ளேன். இந்த போராட்டத்தை நான் கைவிடப்போவதில்லை.

போதைப்பொருளை ஒழிக்கும் திட்டங்களுக்காக எனக்கெதிராக முன் வைக்கப்படும் குற்றசாட்டுக்களால் அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கலுக்கே நன்மை ஏற்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினரை போதையற்ற சமூகத்தில் வாழவைக்க என்னுடைய கடமையை நிறைவேற்ற ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க