உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவுக்குள் மோதல் உக்கிரம் – ‘புதிய கூட்டணி இழுபறியில்’!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல் உக்கிரமடைந்துள்ளால் புதிய அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 5 ஆம் திகதி கைச்சாத்திடப்படுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் மலரவுள்ள புதிய கூட்டணிக்கான உத்தேச யாப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு சஜித்தும் அவரின் சகாக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். யாப்பில் கட்டாயம் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

எனினும், இதற்கு ரணில் தரப்பு இழுத்தடிப்பு செய்துவருவதுடன், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவருகின்றது.

இந்நிலையில் தமது தரப்பு கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் 5 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என சஜித் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு ஐ.தே.கவுக்குள் முரண்பாடுகள் வலுத்துள்ளதால் புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க