முன்னாள் இராணுவ கோப்ரலுக்கு லலித் ராஜபக்ஷவுக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் செய்தி ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், உபாலி தென்னகோன் வெளிநாட்டில் இருப்பதால் சாட்சியாக ஆஜராக முடியாது என்று தெரிவித்ததால், சந்தேக நபரின் அடையாள அணிவகுப்பை இரத்து செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுபிரிவு நீதிமன்றத்தை கோரியது.
அடையாள அணிவகுப்பு இன்று (ஆகஸ்ட் 2) முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டது.
ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வாகனத்தில் உள்ள கைரேகைகள் இராணுவ முன்னாள் கோப்ரலின் கைரேகைகளுடன் ஒத்து போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் தென்னகோன் 23 ஜனவரி 2009 அன்று இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது அவரது மனைவியும் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க