உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டவிரோத மருந்து உற்பத்தி: மூவர் கைது

சட்டவிரோத மருந்து உற்பத்தி ஆலையிடம் மருந்து உற்பத்தி செய்யுமாறு கோரிய மூவரை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அடையாளம் கண்டுள்ளது.

குறித்த நபர்கள் களனி பகுதியில் இடம்பெற்ற சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தலைமை உணவு மற்றும் ஔடத பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மருந்து உற்பத்தி ஆலையில் இருந்து கண்டறியப்பட்ட 10 வகையான காலாவதியான மருந்துகள் மீண்டும் பொதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டமை ஏலவே தெரியவந்துள்ளது.

தற்போது, காலாவதியான மருந்துகளைக் கண்டறிய தேசிய ஒளடதங்கள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் நாடு முழுவதும் குழுக்களை நிறுத்தியுள்ளது.

முந்தைய சோதனைகளின் போது 20 வெவ்வேறு இடங்களிலிருந்து காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க