அவன்ட் -கார்ட் சட்டவிரோத மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2) பிடியாணை பிறப்பித்தது.
அவன்ட் -கார்ட் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் இந்த வழக்கின் சந்தேகநபர்கள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, சேனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பினர் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெர்னாண்டோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் அவர் மற்றொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைய்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் ஓகஸ்ட் 7 ம் திகதிக்கு முன்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை பிறப்பித்தார்.
கருத்து தெரிவிக்க