மட்டக்களப்பு கேம்பஸ் (தனியார் நிறுவனம்) எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் எந்த காரணத்தை கொண்டும் இது அரச உடமை ஆக்கப்படப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்று(வெள்ளிக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்ப்புகள் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.
அத்துடன், மட்டக்களப்பில் கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு கேம்பஸ்சிற்கு (தனியார் நிறுவனம்) கிடைக்கப்பெறும் நிதிதொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தினை அரசுடமையாக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க