உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘பயங்கரவாத விசாரணைகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம்’

உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பில் முறையாக விசாரணைகள் இடம்பெறுகிறதா என மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகலில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் குறித்து  அரசாங்கம் ஸ்தீரமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஸ்தீரமான செயற்பாடுகளை மேற்கொள்ளாது , குற்றப்புலனாய்வுப் பிரிவினரை குறைக்கூறுவதில் எந்தவித பலனுமில்லை

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட்டதாக கூறியுள்ளார்கள். ஆனால், இன்னமும் சிலர் கைது செய்யப்படவில்லை என தற்போது தெரிவித்து வருகிறார்கள்.

இதனால், மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை இம்மாதம் 11 ஆம் திகதி நாம் எமது ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று குழப்பமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.

அங்கு தலைவர்கள் பலர் உருவாக்கி விட்டார்கள். இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, அந்தக் கட்சியிலிருந்து பலரும் தற்போது எம்முடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வருபவர்களை நாம் ஏற்றுக்கொள்வோம்.

எனினும், ஒரு கட்சியில் பிரச்சினையொன்றை ஏற்படுத்தி எமது தரப்பை பலப்படுத்த வேண்டும் என்ற தேவை எமக்குக் கிடையாது.

ஜனாதிபதித் தேர்தல்தான் விரைவில் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல் ஒன்று உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க