நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்டின் புஸ்பராஜ் தலைமையில் கொடியேற்றம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் அதிகளவானோர் பங்குபற்றினர்.
9 நாட்கள் நடைபெறவுள்ள நவநாள் வழிபாடுகளைத் தொடர்ந்து 10ஆம் திகதி லோறன்சியார் ஆலயத்தின் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் எதிர்வரும் ௧௦ ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கத்தோலிக்க தேவாலங்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் மேற்படி ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலக சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க