உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘தோட்டப்புற பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’

 

கல்வி அமைச்சு மற்றும் தொடர்புடைய மாகாண சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தோட்ட புறங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பட்டங்களுக்கு பொருந்தாத பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ளனர் என கடந்த மாதம், பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளை ஹப்புத்தளையில் உள்ள ஒரு பாடசாலையில் ரூ .9 மில்லியன் மதிப்புள்ள புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தோட்டப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயர் படிப்பைத் தொடர வாய்ப்பளிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு கல்வி விடயத்தில் சமமான அணுகலை வழங்குவதற்காக அனைத்து பாடசாலைகளுக்கும் அரசு வசதிகளை வழங்கி வருவதை அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க