ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் பொதுச்செயலாளர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் சிறிகொத்தவில் நடைபெற்றது.
இதன்போது புதிய அரசியல் கூட்டணி தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், புதிய கூட்டணிக்கான யாப்பும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
உத்தேச யாப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு காலஅவகாசம் தேவையென உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததால் அதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கே செயலாளர் பதவி வழங்கப்படவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்பதவியை ஏற்பதற்கு சஜித்தும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கருத்து தெரிவிக்க