இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களை இலக்குவைத்து இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் நாடு முழுவதிலுமுள்ள சகல பரீட்சை மத்திய நிலையங்களிலும் புகைப்பரப்பும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் ப்ரசீலா சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை காலி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க