உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச முஸ்லிம் சம்மேளம் 5 மில்லியன் டொலர் உதவி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச முஸ்லிம் சம்மேளனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நேற்று கொழும்பு  தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் இந்த நிதித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சர்தேச முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான கலாநிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல்இஸா இந்த நிதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

சர்வதேச முஸ்லிம் சம்மேளனத்தினால் நேற்று கொழும்பில் சமாதானம் மற்றும் சகவாழ்வு என்பவற்றுக்கான சர்வதேச மாநாடு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மகாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினர், ஏனைய சமய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க