உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உலர்த்திய தானிய இறக்குமதிக்கு 2 மடங்கு வரி!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தானியவகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 2 மடங்காக அதிகரிக்கப்படும். இந்த தானியங்கள் உலர்த்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரியை விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

சிலாபம், மாதம்பை என்ற இடத்தில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சிலர் தானிய வகைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியிலிருந்து விடுபடுவதற்காக அவற்றை உலர்த்தி கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் தற்பொழுது உளுந்துக்கு 200 ரூபா வரி விதித்தமையினால் அதனையும் உலர்த்தி கொண்டுவர ஆரம்பித்துள்ளனர்.

பாசி பயறுக்கும் இவ்வாறு வரி விதித்தபோதும் இதேபோன்று செய்ய ஆரம்பித்தனர். கௌபிக்கும் இவ்வாறான நடைமுறையே கையாளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த வாரத்தில் நடைபெற்ற வாழ்க்கை செலவு பொது கூட்டத்தில் ஒரு கிலோ உளுந்தை இறக்குமதி செய்யும்போது அது உலர்த்தப்பட்டு இருந்தால் 1 கிலோவிற்கு இறக்குமதி வரி 200 ரூபா என்றால் உலர்த்தப்பட்டால் அதற்கான வரியை 400 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம்.

பாசி பயறுக்கும் இவ்வாறே 2 மடங்காக வரியை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இது உள்ளுர் விவசாயிகளை பாதுகாக்கும் திட்டமாகும்.

விவசாயிகளின் கைதொலைபேசிக்கு எப்ஸ் வசதியை செய்துக்கொடுத்து இந்த தகவல்களை உடனடியாக கிடைக்கக்கூடிய வகையில் ஒழுங்குகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க