முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு ஒக்டோபர் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் சாட்சியாளர்களாக வசீம் தாஜுதீனின் சகோதரி பாத்திமா தாஜுதீன், கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி பேராசிரியர் அஜித் தென்னக்கோன் உள்ளிட்ட 20 பேரை சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த அனுர சேனாநாயக்க ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க