உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

துறைமுகத்தில் 1000 கொள்கலன்கள்: அறிக்கை கோரியது நீதிமன்றம்

கொழும்பு துறைமுகத்திலிருந்து இதுவரை அகற்றப்படாத சுமார் 1000 கொள்கலன்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அரசு ஆய்வாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த 111 கழிவு கொள்கலன்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காத வகையில் வைக்கப்படும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளார்.

கழிவுக் கொள்கலன்களை இறக்குமதியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் நீதி மையம், தாக்கல் செய்த இந்த மனுவில் குறித்த கொள்கலன்களில் கலந்த கழிவுகளை நாட்டில் கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தவும் கோரப்பட்டது.

குறித்த மனு நீதிபதி யசந்த கோடகொட, மற்றும் அர்ஜுன ஒப்சேகர முன் விசாரணை செய்யப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சுங்க பணிப்பாளர் சட்டமா அதிபர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் பெயரிடப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க