உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அடையாள அட்டையற்றவர்களுக்கும் பரீட்சையில் தோற்ற வாய்ப்பு

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் தோற்றுவதற்கான வசதிகள் இருப்பதாக பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி தெரிவித்துள்ளார்.

உயர்தர பரிச்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்பிப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளரினால் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படத்துடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

இதே போன்று பரீட்சைக்கான குறிப்பிட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிசெய்யப்பட்ட 2 புகைப்படங்களுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் பொலிஸ் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில் பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க