பரந்தாமன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் -பழனிநாதன். பிரபாகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட “பிரபா வெற்றிக் கிண்ணம்” 2019 இறுதி போட்டி மற்றும் பரிசில் வழங்கல் நிகழ்வு நேற்று (28) மாலை 2.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இதில் புதியசூரியன் அணி வெற்றிவாகை சூடியது
ஆரம்ப நிகழ்வுகளுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சந்திரன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து புதிய சூரியன் அணியினர் விளையாடியிருந்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உதயசூரியன் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்து சந்திரன் விளையாட்டு கழகத்தினருக்கு துடுப்பாட்டத்தை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சந்திரன் அணியினர் 11 ஓவர்கள் 4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் சந்திரன் அணி சார்பாக கஜன் 23 ஓட்டங்களையும் பந்துவீச்சில் புதிய சூரியன் அணி சார்பாக ருஷாந் மற்றும் கிருபா ஆகியோர் தலா மூன்று இலக்குகளைச் சரித்தனர்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புதிய சூரிய அணியினர் 6 ஓவர்கள் ஐந்து பந்து பரிமாற்றங்களில் ஐந்து இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
உதயசூரியன் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது றொசாந்த் 33 ஓட்டங்களையும் சந்திரன் அணி சார்பாக பந்துவீச்சில் கஜன் இரண்டு இலக்குகளை சரி தரித்திருந்தார்
தொடரின் தொடர் நாயககனாக புதியசூரியன் அணியின் ருஷாந் அவர்களும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரனாக உதயசூரியன் அணியின் தங்கராசா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக புதிய சூரியன் அணியின் அஜெய் அவர்களும் இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக புதிய சூரியன் அணியின் ருஷாந் அவர்களும் தெரிவுசெய்யப்பட்ட்னர்
இறுதியாக வெற்றிபெற்ற அணிகளுக்கான பதக்கங்கள் வெற்றிக்கிண்ணங்கள் என்பன விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது இரண்டாம் இடத்தை பெற்ற சந்திரன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 10000ரூபா பணப்பரிசும் முதலாமிடம் பெற்ற புதியசூரியன் அணி வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 15000ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வு பரந்தாமன் விளையாட்டுக்கழக தலைவர் அமிர்தலிங்கம் அனுசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இலட்சுமிகாந்தன் சந்திரரூபன் (தம்பியன்)அவர்களும் ஏனைய விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந் அவர்களும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க