இதன்போது புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்களை நேற்று புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலீஸ் பரிவிற்கு உட்பட்ட நஞ்சுண்டான் குளப்பகுதியில் நேற்று மாலை சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்’.
இந்நிலையில் ஒவ்வொருநாளும் பொலிசார் இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கைதுகளையும் செய்வார்கள் எனில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் எனவும் ஊடகங்களில் செய்தி வந்ததற்காக இன்று பாரிய அளவில் கைது செய்து இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொலீசார் தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முல்லைத்தீவின் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதில்லை தடுத்து நிறுத்தலாம் எனவும் மக்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
கருத்து தெரிவிக்க