சினிமா

தல அஜித்தின் ‘வீரம்’ ஹிந்தியில் ரீமேக்

சமீப நாட்களாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை அதிக அளவில் ஹிந்தியில் ரீமேக் செய்வதை காணக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில், சிவா இயக்கத்தில் 2014ல் வெளியான அஜித்தின் படம் வீரம். இந்தப் படம் தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அஜித்தின் வீரம் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தல அஜித் நடித்த கதாபாத்திரத்தில், நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் அப்படத்துக்கு “பச்சன் பாண்டே” என பெயர் சூட்டி உள்ளதாகவும் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை முடித்து, டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க