அடுத்துவரும் தோ்தலில் மக்கள் ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன்.
மக்கள் ஆணை வழங்காமல் வலிந்து கிழட்டு அரசியல் செய்யும் விருப்பம் அல்லது தேவை எனக்கில்லை. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளா், நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.
இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.
எதிர்காலத்திலும் இதில் மாற்றங்கள் ஏற்படாது. அண்மையில் கூட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடா்பான இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து சென்றபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர்.
ஆனால் இதுவரையில் அதற்கான ஏற்பாடுகளும் எவையும் நடைபெறவில்லை. அதற்கு காரணம் இந்தியா 13 திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக உள்ளமையாகும்.
அதனாலேயே மோடியும் கூட்டமைப்பினரை சந்திக்க அழைக்கவில்லை.
இதேவேளை அரசிற்கு இத்தனை வருடங்களாக முண்டுகொடுத்துவிட்டு தேர்தல் நெருங்குகின்றது என்றவுடன் 72 நிமிடங்கள் நாடாளுமன்றில் நின்று உரையாற்றியதாக கூட்டமைப்பினர் முழக்கமிடுகின்றனர் என்றும் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தினார்.
கருத்து தெரிவிக்க