உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி எமது நாட்டில் இடம்பொறுவதாக விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொற்றா நோயின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கெக்கிராவ கல்வி பிரிவில் போசாக்கு குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வருடம் ஒன்றில் காய்கறி வகைகளுக்காக 3 இலட்சம் மெக்றிக்தொன் உரவகை பயன்படுத்தப்படுகின்றது.
இதே போன்று 5 ஆயிரம் தொன் கிருமி நாசினி பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க