உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பின்னடைவை சந்தித்திருந்த சிகிரியாவுக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சிகிரியாவுக்கு வருகை தருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றலாப்பயணிகள் என்றும் மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய கலாச்சார நிதிய சிகிரிய திட்டத்தின் முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 900 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதோடு வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பின்னடைவை சந்தித்திருந்த நாட்டின் பொருளாதாரமும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க