சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் 2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
53 வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய ஆணழகர் போட்டியில் நுவரெலியா கொண்டக்கலை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ராஜகுமார் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தார்.
கருத்து தெரிவிக்க