அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைக் குறைப்பினால் தனியார் துறைகளில் மருந்து பெரும் மக்களுக்கு 4,400 மில்லியன் ரூபாய் வரையில் நன்மை கிடைத்துள்ளது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் இறக்குமதிச் செலவு 9,200 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் நிலவிய மருந்து பொருள் தட்டுப்பாடு 2015ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக சீராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க