இயற்கை அனர்த்தம், பிரதேச சபை தேர்தல், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்ற பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்ட போதும் முன்னோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
மக்களின் ஆதரவு அதிகரித்தால் எதிர்காலத்திலும் நாட்டின் முன்னேற்றத்தை பல மடங்காக உயர்த்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று பொரும்பாலானோர் நினைத்தனர்.
எனினும் நாம் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு எம்மை நிலை நிறுத்தி கொண்டுள்ளோம்.
பெரும்பான்மை ஆதரவு இன்றி செயற்படும் நிலையில் எமது அரசாங்கம் நல்ல முறையில் சேவையாற்றி வருகிறது. பெரும்பான்மை பலம் கிடைக்கும் பட்சத்தில் சிறந்த அபிவிருத்திகளை வழங்க முடியும்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்த போதும் நாட்டை அபிவிருத்தி செய்ய இயலாத மஹிந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் உள்ளது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க