வட மாகாணத்தில் தேசிய இளைஞர் சபையினால் முன்னெடுக்கப்படும் 75 துருணு சிரம சக்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 45 திட்டங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 திட்டங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களின் கீழான பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இவற்றிற்கு இளைஞர்களின் பங்கழிப்பும் சமூகத்தினரின் பங்கழிப்பும் கிடைத்துள்ளன.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து திட்டங்களும் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்று தேசிய இளைஞர் மன்றத்தின் வடக்கு கிழக்கு மாகாண பணிப்பளர் சரத் சந்திரபால தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் கவனம் செலுத்தப்படாத அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன் இளைஞர் பாராளுமன்ற நிதியின் கீழ் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு திட்டத்துக்கு 3 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்ட போதிலும் அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பெறுமதியின் தொகையை மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடியதாக இருந்ததாக அவர் கூறினார்.
தேசிய இளைஞர் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரனி எரந்த வெலிஅங்கேயின் வழிகாட்டலில் 1,000 திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க