ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை இரவு நாடு திருப்பியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் மங்களூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
எனினும் சீரற்ற வானிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். அத்தோடு, அவரின் ஏற்பாட்டில் அங்கு சிறப்பு யாகம் ஒன்றும் நடத்தப்பட்டது.
கடும் மழைக்கு மத்தியில் அவர் வழிபாடுகளை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று பிரதமரும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் காசர்கோட்டில் கும்லாவுக்கு அருகே உள்ள பெலா, குமாரமங்கலம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இரண்டு நாள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் அவரது பாரியார் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க