பொன்மொழிகள்

கல்வி!-ஔவையார்

  • கற்க வேண்டிய நூல்களைக் கற்று உனது அறியாமையை நீக்கிக் கொள், அதேபோல் நல்ல நூல்களைக் கற்பதிலிருந்து விலகக்கூடாது. ஏனெனில் நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.
  • முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப்பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு பிறவியிலேயே அமையவேண்டும்.

கருத்து தெரிவிக்க