இலங்கையின் முன்னணி பந்து வீச்சாளராக இருந்து, உலக அளவில் பல சாதனைகளை படைத்திருக்கும் முத்தையா முரளீதரன் வாழ்க்கை வரலாற்றையும் 800 என்ற பெயரில் படமாக்க தீர்மானித்துள்ளனர். அந்தப் படத்தை, தார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், முத்தையா முரளீதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
முத்தையா முரளீதரன் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், படத்துக்கு 800 என பெயர் சூட்ட இருப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து, முத்தையா முரளீதரன் கூறியிருப்பதாவது: தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ் படம் ஒன்று தயாரிக்கப்படுவது, தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது தனக்கு சந்தோஷத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு விஜய் சேதுபதி,
முரளீதரனாக நடிப்பது தனக்கு தான் பெருமை என்கிறார்.
எப்படியிருப்பினும், சச்சின், டோனி உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்த படங்களெல்லாம் சிறப்பாக ஓடி இருக்கும் நிலையில் இப்படமும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கருத்து தெரிவிக்க